கார்த்தி சிதம்பரம் ரூ1.16 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1.16 கோடி மதிப்பு சொத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது வரும் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு, சிபிஐக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.