- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று (மே 30) காலை நீட்டித்தது.

இவ்வழக்கில் கார்த்திக்கு எதிராக அப்ரூவராக மாற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் எந்நேரமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கார்த்தி தற்போது எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.