காரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மனின் ‘எழில் பூக்கள்’ கவிதை நூல் அறிமுக விழா

காரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், கொழும்பில் பிறந்து வளர்ந்து தற்போது சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிலும் சைவத்திலும் தணியாத பற்றுடையவர். புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ. இரத்தினம் அவர்களிடமும் இளமையிலே தமிழ் கற்றவர். பின்னர் பேராசிரியர் இராசு வடிவேலு அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்றவர்.
யாப்பிலக்கணத்திற்கு அமைய பல மரபுக் கவிதைகளைப் படைத்துள்ள இவர் தமது மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூலையும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 1120 Tapscott Road Unit 3, Scarborough (McNicoll & Tapscott) நூல், மற்றும் இறுவெட்டு விற்பனை மூலம் பெறப்படும் நிதி கிளிநொச்சி காந்தி நிலைய சிறுவர் இல்லத்திற்கு வழங்கப்பட இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ் வாழ வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து முயன்று வருகின்ற கவிஞர் த.நந்திவர்மன் அவர்களின் பணிக்கு கனடா வாழ் காரைநகர் மக்களின் ஆதரவு வேண்டப்படுகின்றது.