காணாமல்போனோர் உறவினர்கள் – மைத்திரி இன்று சந்திப்பு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் இரு அருட்­தந்­தை­யர்­க­ளும் இணைந்தே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்­க­வுள்­ள­னர். இந்­தச் சந்­திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சந்­திப்பு இன்று பிற்­ப­கல் 2 மணிக்­கு நடை­பெ­றும் என்று முன்­னர் அறி­விக்­கப்­பட்டி ருந்­த­போ­தும், திடீ­ரென அது மாலை 4 மணிக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்பா­ணத்­துக்கு திடீர்ப் பய­ண­மாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்புக்கு வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில் பாலேஸ்வரி, கிளிநொச்சி மாவட்டத்தின் சார்பில் கனகரஞ்சினி, லீலாதேவி, யசோதரன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சார்பில் ஈஸ்வரி, யாழ்ப்பாண மாவட்டத்தின் சார்பில் சித்திராதேவி, மன்னார் மாவட்டத்தின் சார்பில் உதயசந்திரா, மட்டக்களப்பு மாவட்டத்தின் சார்பில் அமலி, திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் ஜெயலக்சுமிபிள்ளை, அம்பாறை மாவட்டத்தின் சார்பில் செல்வராணி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவர்களுடன் சட்டத்தரணியான இரத்தினவேல், அருட்தந்தை செபமாலை ஆகியோரும் மேலும் மூவரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.