கலக்கத்தில் ‘சி 3’ படக்குழுவினர்

‘S 3’ என்று படம் ஆரம்பிக்கும் போதுவிளம்பரப்படுத்தப்பட்ட ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம்பாகம், பின்னர் ‘C 3’ என்று

அழைக்கப்பட ஆரம்பித்தது. தமிழில் ‘சி 3’ என்றும் பலரும்கூற ஆரம்பித்தார்கள். ஆனால், நேற்று தயாரிப்புநிறுவனத் தரப்பிலிருந்து படத்தை ‘C 3’ என்று அழைக்கவேண்டாம், ‘Si 3’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள். ஆனால், சராசரி ரசிகரை எப்படி குழப்பினாலும், ‘சிங்கம்பார்ட் 3’ என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.

‘சி 3’ படம் நாளை 26ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கிலும், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் என 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்வெளியிடுவதாக இருந்தார்கள். தெலுங்கு மாநிலங்களில் பொங்கலின் போது வெளிவந்த ‘கைதி நம்பர் 150, கௌதமிபுத்ர சட்டகர்னி, ஷதமானம் பவதி’ ஆகிய மூன்று படங்களுமேஇன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ‘சி 3’ படத்தை வெளியிடுவதில் சிக்கல்ஏற்பட்டது.

இதனிடையே, ‘சி 3’ படம் காவல்துறை சம்பந்தப்பட்ட படம். மேலும், 30 வருடங்களுக்குமுன்பு நடந்த ஒரு கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட கதை என்றும் தகவல்வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு பேராட்டத்தில்காவல் துறையினரின் அத்து மீறல்கள் குறித்து மீடியாக்களும், பொதுமக்களும்விமர்சித்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் காவல் துறை சம்பந்தப்பட்ட ‘சி 3’ படம் மக்களின்உணர்வுகளோடு தொடர்புபடுத்தி வருவதால் படத்தின் வசூலைப் பாதிக்கும் எனவினியோகஸ்தர்கள் சொன்னார்களாம். அதனால்தான் படத்தின் வெளியீட்டை பிப்ரவரிமாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டுநாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நிறைவுறும் நாளன்று ‘சி 3’ குழுவினர்வெளியிட்ட “மக்களோடு மக்களாக கைகோர்த்து நிற்கும் காவல் துறையினருக்கு தலைவணங்குகிறோம்,” என்ற விளம்பரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டுவருகிறது.

சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளியான படங்கள் வியாபார ரீதியாக தோல்விப்படங்களாக அமைந்ததால் ‘சி 3’ படத்தை அவசரப்பட்டு வெளியிட வேண்டாம் என்றும்தயாரிப்பு தரப்பில் முடிவெடுத்துள்ளார்களாம்.