- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

கறுப்பு பணம் எதிர்ப்பு தினம்: ஜெட்லி தகவல் – நவ.8
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வரும் நவம்பர் 8 ம் தேதியை நாடு முழுவதும் கறுப்பு பணம் எதிர்ப்பு தினமாக பா.ஜ., கொண்டாடும். கறுப்பு பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நடவடிக்கை கூட எடுத்தது கிடையாது. அக்கட்சி பல முறை ஆட்சியில் இருந்த போதும், கறுப்பு பணத்திற்கு எதிராக ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை. அக்கட்சி தலைவர்கள் சுய நலம் காரணமாக ரொக்க பொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் முக்கியத்துவத்தை காங்கிரசார் புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து எதிர்க்கட்சியினரும் நவம்பர் 8 ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.