- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

கறிக் கடை பாயுக்கு கொரோனா வைரஸ் தொற்று: கறி வாங்கியோர் பரிதவிப்பு
டில்லியில் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட இஸ்லாமிய மாநாட்டில் சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில், 3 பேர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சார்ந்தவர்கள், ஒருவர் திருவண்டார்கோவில் பகுதியைச் சார்ந்தவர்.
இந்தநோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறைச்சிக் கடை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 22ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.
மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் மொத்தம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள்
மகாராஷ்டிரம் 335 42 13
கேரளம் 265 25 2
தமிழ்நாடு 234 6 1
டெல்லி 219 8 4
உத்திரப் பிரதேசம் 113 14 2
கர்நாடகம் 110 9 3
ராஜஸ்தான் 108 3 0
தெலங்கானா 107 1 3
மத்தியப் பிரதேசம் 99 0 6
குஜராத் 87 8 7
ஆந்திரப் பிரதேசம் 86 1 1
ஜம்மு & காஷ்மீர் 62 2 2
மேற்கு வங்கம் 53 6 3
பஞ்சாப் 46 1 4
ஹரியாணா 43 21 0
பிகார் 24 0 1
சண்டிகர் 16 0 0
லடாக் 13 3 0
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 10 0 0
சத்தீஸ்கர் 9 2 0
உத்திராகண்ட் 7 2 0
கோவா 5 0 0
அசாம் 5 0 0
ஒடிஷா 4 0 0
இமாச்சல பிரதேசம் 3 1 1
புதுவை 3 1 0
மணிப்பூர் 1 0 0
மிசோரம் 1 0 0
ஜார்கண்ட் 1 0 0
தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 21: 48 IST
இதனைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் இறைச்சி விற்பனை செய்துள்ளதாகவும், அவரிடமிருந்து அப்பகுதி மக்கள் இறைச்சி வாங்கி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரிடம் இறைச்சி வாங்கி சென்றுள்ள நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு சளி, இருமல் போன்றவை இருக்கும் பட்சத்தில் அவர்களாகவே தெரியப்படுத்த அரசாங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது.
பாதிப்பட்டவர்களுடன் மக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பிலிருக்க வாய்ப்பிருக்கும் என்ற சந்தேகத்தின் காரணமாக, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள மக்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.
முழுவதுமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த பகுதியில் இருக்கும் மருந்தகம், பால், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து கடைகளையும் திறக்க தடை செய்யப்பட்டுள்ளது.