கர்நாடக திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் நடிகை பாவனா

2002–ல் மலையாள பட உலகில் அறிமுகமாகி 3 வருடங்களில் 20 படங்களில் நடித்து முடித்து சக நடிகைகளுக்கு பெரிய போட்டியாக இருந்தார்.

2006–ல் வசூலில் சக்கைப்போடு போட்ட சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘‘வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்’’ பாடல் பட்டிதொட்டியை கலக்கியது.

ஜெயம்ரவி ஜோடியாக ‘தீபாவளி’, பரத்துடன் ‘வெயில்’, ‘கூடல் நகர்’, மாதவனுடன் ‘ஆர்யா’, ‘வாழ்த்துகள்’, ஜீவாவுடன் ராமேஸ்வரம், அஜித்குமாருடன் அசல் என்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில்  கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் நவீன் உடன் நடிகை பாவனாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதியையும் அறிவிக்கப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.