கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் ; வாக்கு எண்ணிக்கை மே 15

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.

கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.

இந்த நிலையில், இன்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத்டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* வாக்கு சீட்டு விவரங்கள் மாநில மொழியான கன்னடத்திலும் அச்சிடப்பட்டு இருக்கும்.

* மாற்று திறனாளிகள் சிரம்மின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

* தேர்தலுக்காக, 99% புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயார்

* புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு ஒரு வாரத்திற்கு முன்பே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.

* வாக்காளர்களுக்கு உதவி செய்ய அனைத்து வாக்கு சாவடிகளில் உதவி மையம் அமைக்கப்படும்

* வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்

* தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது

* கர்நாடக தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பு இல்லை.

* கர்நாடக சட்டபேரவைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும்.

* வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது

* வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17

* வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 24 ; 25 ந்தேதி வேட்பு மனு பரிசீலனை 27 ந்தேது மனு வாபாஸ் வாங்க கடைசி நாள்

* வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும்