கர்நாடகதில் பிஜேபி வெற்றி

பா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை.

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், தேர்தல் முடிவு நிலவரம் நண்பகல் 11.30 மணிக்கு மேல் தான் தெரிய வரும். மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி குறித்து குலாம் நபி ஆசாத் மற்றும் அசாக் கெலாட்டுடன் ஆலோசிக்க உள்ளேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், இது ஆரம்ப கட்ட முடிவு தான். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற வாய்ப்பு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்படும். .இவ்வாறு அவர் கூறினார்.