கருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்?

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாகதொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்தியஅளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றேசொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின்தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணவிஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும்கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்துகொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக்கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது?’ என்றகேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான்தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின்அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார்.அவர்களும் அதை வழிமொழிந்து விட்டார்கள். ஆனால் அந்த தலைவர் பதவியைவிட்டுத்தர வேண்டிய கருணாநிதியோ இன்னும் அமைதியாக இருக்கிறார். தலைவர்பதவிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன், தான் கட்சியில் சேர்ந்து விடவேண்டும் என்றுஅழகிரி துடிக்கிறார். அடிக்கடி அப்பாவைப் பார்த்து அதற்கு அச்சாரம் போட்டு வருகிறார்அவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே அறிவிக்கப்படாத தலைவர் போலத் தான்ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.

கருணாநிதி உடல்நிலை இப்போது நலிவுற்று இருக்கும் நேரத்தில், ஒரு கட்சியின்தலைவராகவே  முழு பரிமாணத்திற்கு கிட்டத்தட்ட ஸ்டாலின் வந்துவிட்டார் என்றேசொல்லலாம். திராவிட இயக்க விழாக்களை தி.மு.க நடத்தினால், அதில் கருணாநிதிஇடம்பெறாமல் நடைபெறாது. இதுதான் இத்தனை ஆண்டுகால வழக்கம். ஆனால்,திராவிடக் கட்சிகளுக்கு தாய்க் கட்சியான நீதிக் கட்சியின் நுாற்றாண்டு நிறைவுவிழாஅறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற, அதில் பேசிய தலைவர்கள்அடுத்தத் தலைவர் ஸ்டாலின்தான் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்கள். அந்தவிழாவில், பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், “நீ தான் எங்கள்தலைவர்” என்று ஸ்டாலினை சுட்டிக்காட்டிப் பேசி பரபரப்பை மேலும்அதிகரித்துள்ளார். இதே நிகழ்ச்சியில் பேசிய சுப. வீரபாண்டியன், “முடிசூட்டு விழாவாகதலைவர் பதவி ஏற்பு விழா” நடைபெறும் என்று ஓபனாகவே பேசினார். நீதிக்கட்சியின்நுாற்றாண்டு விழாவில் இவர்கள் பேசியதை மேடைப்பேச்சாக எடுத்துக் கொள்ளமுடியாது. காரணம், ‘நீதான் எங்கள் தலைவர்’ என்று பேசிய துரைமுருகன், தி.மு.கவின் முதன்மைச் செயலாளர். ‘கருணாநிதியின் கண் அசைவை வைத்து, அவர் சொல்லவரும் கருத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு கருணாநிதியின் நிழலாக இருப்பவர்.அதைத் தாண்டி, கட்சியில் ஸ்டாலினைவிட மூத்தவர். இவரால் முன்மொழியப்பட்டதுஎன்பது தி.மு.க வின் தலைமையின் கண் அசைவில்தான் நடந்துள்ளது’ என்கிறார்கள்தி.மு.க-விற்கு நெருக்கமானவர்கள்.

கருணாநிதியோ ஸ்டாலினை தலைவராக்கும் மனநி்லையில் இருந்தாலும், தனதுதலைவர் பதவியை விட்டுத் தரவும் மனமில்லாமல் இருந்து வருகிறார். தலைவர்பதவியை விட்டுக் கொடுத்தால், ஒய்வுபெற்று விட்டார் கருணாநிதி என்ற பேச்சு வரும்.ஒய்வுக்கே ஒய்வு கொடுத்த இந்த கருணாநிதியால், அப்படி இருக்க முடியாது என்றுஅன்பழகனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தவர்.

ஆனாலும், ‘தலைவராக தன்னால் இப்போது சுறுசுறுப்புடன் செயல்பட முடியவில்லைஎன்பதால், ஸ்டாலினை செயல் தலைவராக்குவதற்கு என்று இப்போது கருணாநிதிஒப்புக்கொண்டுள்ளார் ‘ என்கிறார்கள் அவர்கள். ஆனால் இதற்கு அன்பழகன்தரப்பில்இருந்து பாசிட்டிவ் பதில் இன்னும் வரவில்லை. அதேபோல் அழகிரியை மீண்டும்கட்சிக்குள் சேர்த்தால்தான் இதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இந்நிலையில்தான்,இன்றுகாலை திடீர் என்று, அழகிரி கோபாலபுரத்திற்கு வருகை தந்தார். சிறிது நேரத்தில்ஸ்டாலினும் அங்கு வந்தார். இருவரும் தனித்தனியாக கருணாநிதியைசந்தித்துள்ளார்கள். அப்போது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி அளிப்பது குறித்துபேசப்பட்டதாக கூறப்படுகிறது. ‘டிசம்பர் மாதத்தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம்நடத்தி, செயல்தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதும், அந்தபொதுக்குழுவில் இந்த அறிவிப்பை தலைவர் கருணாநிதியே அறிவிக்கும் வாய்ப்பும்உள்ளது’ என்பதே கோபாலபுரத்தில் இருந்து வெளியே கசியும் செய்திகள். இந்தடிஸ்கசன் இன்னும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை வைத்து நடக்கவில்லை.அப்படி நடக்கும் போதுதான், இது முழுவடிவத்திற்கு வர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்கருணாநிதி குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.

COMMENTS

 • I believe everything said was actually very reasonable.
  However, consider this, suppose you wrote a catchier post title?

  I mean, I don’t wish to tell you how to run your website,
  but what if you added something that makes people
  want more? I mean கருணாநிதி ஒப்புதலோடு லைவராகிறாரா ஸ்டாலின்?
  | Canada Uthayan is kinda vanilla. You ought to glance at Yahoo’s
  home page and watch how they create news titles to get viewers interested.
  You might add a video or a pic or two to grab readers interested about everything’ve written. In my opinion, it could make your posts
  a little livelier.

Comments are closed.