கரணவாய் மத்தியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 20 பவுண் நகை கொள்ளை

பட்டப்பகல் வேளை வீடு புகுந்த திருடர்கள் அங்கிருந்த இருபது பவுண் நகைகளை திருடிச் சென்று ள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பகல் பத்து மணிக்கும் பதினொரு மணி க்கும் இடைப்பட்ட நேரத்தில் கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள இரத்தினமூர்த்தி சதானந்தமூர்த்தி என்பவரது வீட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவ ருவதாவது.

வீட்டில் உள்ளவர்கள்வேலைக்கு சென்றிருந்த நிலையில் வயோதிப மூதாட்டி ஒருவர் வீட்டில் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி உள்நுழைந்த திருடர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி, நெக்கிளஸ் உள்ளிட்ட பதினாறு பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் தீவிரமான புலன்விசாரணை யினை மேற்கொண்டுள்ளனர். இவ் வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஒன்றரை மாதங்களிற்கு முன்னர் இதே பாணியில் நகைகள் திருடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.