கமலுக்கு வரலாறு தெரியாது: ஜெயகுமார்

சென்னை : ”தமிழகத்தில், 2001 முதல் அனைத்து துறைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.நடிகர் கமலுக்கு, வரலாறு தெரியவில்லை என்றால், என்னிடம் போனில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்,” என,மீன்வளத்துறைஅமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சமூகநலத்துறை சார்பில், சென்னை, தி.நகரில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.இதில், சென்னையில்

உள்ள பல்வேறு அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த, 500 கர்ப்பிணி பெண்களுக்கு,ஜாதி மத பேதமின்றி, ஒன்றாக வளைகாப்பு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவும், சீர்வரிசைப் பொருட்கள் அடங்கிய பைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்,மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், சமூகநலத்துறை அமைச்சர், சரோஜா, கலெக்டர், அன்புசெல்வன்ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின், அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:தமிழகத்தில், வெளிப்படையான அரசு நடந்து வருகிறது. தி.மு.க.,அரசியல் உள்நோக்கத்துடன், அரசை குறைகூறி வருகிறது. நடிகர் கமலுக்கு வரலாறு தெரியவில்லை. தமிழகத்தில், 2001 முதல் அனைத்து துறைகளும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. கமலுக்கு வரலாறு தெரியவில்லை என்றால், என்னிடம் போனில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கூறினார்.