கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி

நடிகர் ரஜினி சென்னை-சேலம் எட்டு வழிப் பாதையை ஆதரித்து கருத்துக் கூறியதன் மூலம் இது நிரூபணமாகி உள்ளது.ரஜினி கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழிப்பாதை போடப்பட இருப்பது அவசியம். கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பாடாத வகையில் செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அத் துறை சிறப்பாக செயல்படுகிறது. பாராட்டுக்கள்.
நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக, பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. செலவு, நேரம் மிச்சமாகும். அதற்காக, புதிதாக ஆரம்பிக்க இருக்கும் எங்கள் கட்சி, பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்பது அர்த்தமல்ல.இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
துாத்துக்குடி துப்பாக்கி சூடு, 8 வழிச்சாலை, மற்ற போராட்டங்கள் குறித்து கமல் சொன்ன கருத்துகளுக்கு எதிராகவே ரஜினி கருத்து தெரிவித்து வருகிறார்.
ரஜினிகாந்த் கருத்து மிகவும் சரியானது ,எதோ பொத்தம் பொதுவாய் பாக்காமல் ஆராய்ந்து பாக்கவேண்டும. அவர் சொல்வது மிகவும் சரி .கமலஹாசன் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.