கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் சிறு வணிகம் சார்ந்த வர்த்தக வரிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான கருத்தரங்கு

நீங்கள் ஒரு சிறு தொழில், வணிகம் அல்லது தனியார் நிறுவனத்தின் (Private Corporation) உடைமையாளாரா? மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கும் சிறு வணிக வரி மாற்றம் உங்கள் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.
அரசு என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது, அதற்காக அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் என்ன, அவைகுறித்துத் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு நம் ஒருமித்த கருத்துக்களை அரசிற்கும் தெரிவிக்கலாம் போன்றவற்றைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா?
கனேடிய தமிழ்ர் வர்த்தக சம்மேளனத்தின் வணிகம் மற்றும் வரித்துறைகளில் அனுபவமிக்க நிபுணர் குழு விவாதத்தில் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்படி கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 30, 2017 காலை 8.30 மணிக்கு 1686 Ellesemere Road, Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள JC Banquet Hall மண்டபத்தில் நடைபெறும்