கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களோடு மனந்திறந்து உரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரி

அண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற வர்த்தக் மேம்பாட்டுக் குழுவினரோடு இணைந்து சென்ற கனடாவின் லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெஸ்மின் மற்றும் ஏனைய என்டிபி,கொன்சர்வேர்ட்டிவ் கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மேம்பாட்டுக் குழுவின் தலைவர் திரு கணேசன் சுகுமார் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரியை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடிய திரு ஆனந்தசங்கரி மனந்திறந்து உரையாடியதாகவும் குறிப்பாக கனடா வாழ் தமிழ் பேசும் வர்த்தகத்துறை வெற்றியாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்து போரினாலட பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அறியப்படுகின்றது.