கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாட்டின் தமிழறிஞர்களில் ஒருவரும் அண்மையில் “தினத்தந்தி” தமிழறிஞர் விருது பெற்றவருமான வா. மு. சேதுராமன் அவர்களின் சிரேஸ்ட புதல்வரும் “தமிழ்ப்பணி” மாத சஞ்சிகையின் ஆசிரியருமான திரு வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது.

ஸ்காபுறோவில் 30 SWELLS ROAD என்னும் விலாசத்தில் அமைந்துள்ள TORONTO PUBLIC LIBRARY – MALVERN BRANCH கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி தமிழ் மணக்கும் விழாவை சிறப்பிக்குமாறு அனைத்து நெஞ்சங்களையும் கனடா உதயன் அழைக்கின்றான்.

சிறப்புரையும் பதிலுரையும் ஆற்ற வா.மு.செ. திருவள்ளுவர் அங்கு நேரடியாக கலந்து கொள்கின்றார்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரம் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை

மேலதிக விபரங்களுக்கு:- 416 732 1608 அல்லது 647 409 8966 அல்லது 416 991 1292 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்