கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பான “ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் தமிழ்நாட்டிலும் கனடாவிலும் ஒரே நாளில் திரையிடப்படுகின்றது

“ஏண்டா தலையில என்ன வைக்கேல்ல” திரைப்படம் ஒரு கனடா- இந்திய கூட்டுத் தயாரிப்பு. கனடாவின் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், திருமதி சுபா தம்பிப்பிள்ளை, டாக்டர் வாசுகி ஆசிர்வாதம் ஆகிய இரண்டு பெண்மணிகள் மற்றும் இசைப் புயல் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களின் சகோதரியும் இசையமைப்பாளருமான ஏ. ஆர். ரெஹேனா ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் வெளியாகவுள்ளது.
தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி தொடக்கம் சுமார் 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள இந்தத் திரைப்படம் கனடாவின் ஸ்காபுறோ நகரில் பின்ச்- மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் சரவணபவான் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வூட்சைட் சினிமாவில் டிசம்பர் மாதம் 16ம் திகதி சனிக்கிழமையும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 4.00 மணிக்காட்சியில் காண்பிக்கப்படவுள்ளது.
கனடாவின் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம், திருமதி சுபா தம்பிப்பிள்ளை, டாக்டர் வாசுகி ஆசிர்வாதம் ஆகிய இரண்டு பெண்மணிகளான தயாரிபபாளர்கள் தமிழ்நாடு முழுவதிலும் திரையிடப்படவுள்ள டிசம்பர் 15ம் திகதி சென்னையில் நடைபெறும் விசேடகாட்சியில் பங்கெடுப்பதற்;காக சென்னை செல்கின்றார்கள்.
கனடாவில் இந்த திரைப்படத்தை திரையிடும் பொறுப்பை இங்குள்ள யுபி மீடியா நிறுவனம் ஏற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் நகைச்சுவை மற்றும் திகில் நிறைந்த கதையைக் கொண்டது என்றும் இனிமையான பாடல்கள் படத்தில் இடம்பெறுகின்றன என்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திருமதி சுபா தம்பிப்;பிள்ளை “கனடா உதயன்” ஆசிரிய பீடத்திற்கு தெரிவித்துள்ளார். கனடா வாழ் திரைப்பட இரசிகர்கள் எதிர்வரும் டிசம்பர் 16ம் 17ம் திகதிகளில் வூட்சைட் சினிமாவில் இந்த திரைப்படத்தை கண்டு களிப்பதன் மூலம் எதிர்காலத்திலும் இதைப் போன்ற பல கூட்டுத் தயாரிப்புக்கள் உருவாக ஆதரவை வழங்கவேண்டும் என்றும் திருமதி சுபா தம்பிப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுமதிச் சீட்டுக்கள் பத்து டாலர்கள் மாத்திரமே.
மேலதிக விபரங்களுக்கும் அனுமதிச் சீட்டுக்களைப் பெறவும் 416 732 1608 அல்லது 416 399 3449 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்.