கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

VERY IMPORTANT NOTICE
மிக முக்கிய அறிவித்தல்

கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

இது குறித்து இயக்கத்தைப் பதிவு செய்து அதன் தலைமையகத்தையும் கொண்டியங்கும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இனிவரும் காலங்களில் அதாவது 29.04.2017 இற்குப் பின்னர் அவற்றை இயக்கத்தின் தலைவர் திரு. வி. துரைராஜா மற்றும் பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஆகியோரது எழுத்து மூலமான அனுமதியின்றிப் பாவிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என கனடா நாட்டின் கலாசார அமைப்புக்களைப் பதிவு செய்யும் இராஜாங்கத் திணைக்களத்தினால் உத்தியோபுர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை காலமும் தமது தற்பெருமைகளை பறைசாற்றவும், புகழ்ச்சிகளுக்காகவும் சிலரை இணைத்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாகச் செயற்பட்டவர்கள் இதனைக் கவனத்திற் கொண்டு செயற்படுமாறு தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அறிவித்தலை தலைமையகத்தின் அகிலத் தலைவர் திரு. வி. துரைராஜா அவர்களும், அகிலப் பொதுச் செயலாளர் நாயகம் திருவாளர் துரை கணேசலிங்கமும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.