- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
- பிரிட்டனில் இருந்து டில்லிக்கு கொரோனாவுடன் திரும்பிய பெண் ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி ஓடியதால் அதிர்ச்சி!!
- கன்னியாஸ்திரி கொலை வழக்கு: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை !!

கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த செல்வகுமார் விடுதலை
– கனடாவில் தொடர் பாலியல் பலாத்கார வழக்கில், 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த மலேசியரான செல்வக்குமார் சுப்பையா, இம்மாதம் விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படுகின்றார்
செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும் இல்லையென மலேசியா, தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார். எனினும், செல்வக்குமாரை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் காலிட் உறுதியளித்துள்ளார்.
கனடாவில் 19 பாலியல் பலாத்கார வழக்குகள், 28 போதைப் பொருட்களைப் பயன்படுத்திய வழக்குகள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட இதர வழக்குகள் ஆகியவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வக்குமாருக்கு கடந்த 1992-ம் ஆண்டு கனடா நாட்டில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனவரி 29-ம் தேதியோடு, அவரது சிறைத் தண்டனைக் காலம் நிறைவடைந்து, செல்வக்குமார் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.