கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

சீனாவில் தயாரிக்கப்பட்டு கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டை ஒன்ரை வாங்ஜினார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது.

வீட்டுக்கு வந்த அவர் உலக உருண்டையை பார்த்து கொண்டு இருந்தார். அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து என்று காட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து அவர் அந்த கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியின் தவறான சித்திரம் அவரது மகள் போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த குழந்தைகளை பாதிக்கும் என்று அவர் கவலையடைந்தார்.

காஷ்மீரை நாம் நாட்டின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று சொல்லவில்லை என்றால். எதிர்கால சந்ததியினர் இதையே நம்புவர் என கூறினார்.

இதே போன்று கடந்த மூன்று மாதங்களுக்கும் முன்பு சீனாவின் உலக உருண்டை இவ்வாறு விற்கபட்டது. அதில் ஜம்மு காஷ்மீரும் ,அருணாசல பிரதேசமும் இந்தியாவில் இருந்து பிரித்து கட்டப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து கோஸ்ட்கோ நிர்வாகத்தில் ஒரு புகார் கூறப்பட்டு உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் உடனடியாக இந்த உலக உருண்டை விற்பனையை உலகளவில் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளனர்.