கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு மூலம் வைத்தியசாலைக்கு ஐம்பதாயிரம் டாலர்கள் திரட்டப்பட்டன.
கடந்தநாளை சனிக்கிழமை 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் 46 பரத நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் 1000 நடனக் கலைஞர்கள் பங்குபற்றும் “பரத மைல்” முழு நீள நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டும் ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்வனவு செய்யும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பல சமூகத் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஐம்பதாயிரம் டாலருக்குரிய மாதிரிக் காசோலையை நடன ஆசிரியைகள் ஸ்காபுறோ வைத்தியசாலை பிரதிநிதிகளிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.