கனடாவில் சுமார் 30 வருடங்களாக இயங்கி வருகின்றது ஏரிஎன் தொலைக்காட்சி நிறுவனம். தற்போது சுமார் 65 பல் மொழி தொலைக்காட்சிச் சனல்கள் இந்த ஏரிஎன் ஊடாக, உலகெங்கும் உள்ள தொலைக்காட்சி ரசிகர்களை நாடிச் சென்று அவர்களை மகிழ்விக்கின்றன.

ஏர்என் தொலைக்காட்சியின் அதிபர் திரு சாண் சந்திரசேகர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நட்சத்திரம் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் ஆவார். கனடாவில் பல உயர் அரச விருதுகளைப் பெற்றும், இன்னும் எவ்வித ஆர்பபாட்டம் இல்லாமல் இயங்கிவருகின்றார்.

இவ்வாறான ஏரிஎன் தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றுபவர் திரு நேரு அவர்கள். எப்போதும் சிரித்த முகம், நட்புள்ளம் கொண்டவர் என்பதால் கம்பீரமாகவே காணப்படுவார்.

கனடா உதயன் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் போதிய விளம்பத்தையும் தந்து அதன் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவது ஏரிஎன் தொலைக்காட்சியின் வழமையான பணி.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏரி என் தொலைக்காட்சியில், எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று நடைபெறும் உதயன் சர்வதேச விருது விழா தொடர்பான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. விசேடமாக உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அங்கு செல்வதற்கு நாம் ஏற்பாடுகளைச் செய்தோம்.

இவ்வருடத்திற்குரிய வெளிநாட்டு விருதுகளில் ஒன்றான “ஸ்கென்டிநேவியன் நாடுகளுக்கான சிறப்பு விருதைப் பெறும் பன்முகக் கலைஞர் கோவிலூர் செல்வராஜன் வியாழ்ககிழமை இங்கு வந்துவிட்டார்.

எனவே அவரையும் அழைத்துக்கொண்டு ஏரிஎன் தொலைக்காட்சி கலையகத்திற்குச் சென்றோம். அங்கு நேரு அவர்களும் எம்மை நேர்காணல் செய்யவுள்ள அனிற்றாவும்; வரவேற்றார்கள்.

நேர்காணல் சிறப்பாக சென்றது. அனிற்றாவும் நேரு அவர்களும் நன்றாக ஒத்துழைத்து dபின்னர் பிரதம ஆசிரியர் அவர்களோடும் கோவிலூர் செல்வராஜனோடும் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.