கனடாவில் கடந்த 5 வருடங்களாக இயங்கிவரும் “பண்ணாகம் மக்கள் ஒன்றியம்” தனது ஆண்டு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொவில் உள்ள பாபா விழா மண்டபத்தில் நடத்தியது

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மேற்படி விழாவில் கவுன்சிலர் நீதன் சாண் பிரதம விருந்தினராகவும் திருவாளர்கள் குமார் இரத்தினம் மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து சிறப்பித்தார்கள்
ஒன்றியத்தின் தலைவர் திரு பொ. சர்வேஸ்வரன்; ஏனைய அங்கத்தவர்களோடு இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறபபாகச் செய்திருநதார்.
சிறப்பு விருந்தினராக பண்ணாகம்.கொம் என்னும் இணையத்தளத்தின் ஸ்தாபகர் திரு க. கிருஸ்ணமூர்த்தி தனது பாரியாருடன் ஜேர்மனி நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என்னும் என்னும் தமிழீழத்திற்கான அத்திவாரம் போடப்பட்டது பண்ணாகத்தில் தான். எனவே தமிழீழப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னரே எமது மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத்தொடங்கினார்கள். எனவே நான் பண்ணாகம் தான் எம்மவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியது என்று எப்போது கூறுவதுணடு என்று நகைச்சுவையாகக் கூறினார்.
கலை நிகழ்ச்சிகளும் கௌரவிப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பண்ணாகம்.கொம் என்னும் இணையத்தளத்தின் ஸ்தாபகர் திரு க. கிருஸ்ணமூர்த்தி பண்ணாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல சேவையாளர்களை கௌரவித்தார். பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோரும் தகுந்த முறையில் நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்கள்.

இங்கு காணப்படும் படங்கள் விழாவில் எடுக்கபபட்டவையாகும்