கனடாவரும் முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் அவர்களை கரம்கூப்பி வரவேற்போமாக!

இன்னும் இரண்டு வாரங்களில் எமக்காக புத்தாண்டு 2017 பிறக்கப்போகின்றது. புத்தாண்டில் புதியவை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் நாம் அனைவரும் வாழ்வில் காத்திருப்பதுண்டு. புதிய வருடத்தில் என்னதான் எமக்கு கிட்டப்போகின்றது என்று எண்ணியிருந்த கனடாவாழ் தமிழ் மக்களை சந்திக்க தாயகத்திலிருந்து வடக்கின் முதலமைச்சர் திரு சி. வி. விக்கினேஸ்வரன் எங்கள் புலம் பெயர் மண்ணுக்கு வருகின்றார் என்ற நற்செய்தி எமக்கு கிட்டியுள்ளது. அவரது விஜயம் தொடர்பான விரிவான செய்தி எமது இவ்வார உட்பக்க மொன்றில் காணப்படுகின்றது.

தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் எமது உறவுகளில் பலர் பல்வேறு துன்பங்களைஅனுபவித்து வருகின்றார்கள். அவர்களில் பலர் போரினால் ஏற்பட்டு வடுக்கள் இன்னும் மறையாமல் மனங்கள் பாதிக்கப்பட்ட துயரோடு வாழ்ந்து வருகின்றார்கள். அங்கங்களை இழந்தவர்கள், உறவுகளை இராணுவக் கொடியோரின் துப்பாக்கிகளுக்கு இரையாகக் கொடுத்தவர்கள். இருட்டுச் சிறைகளில் இருபது அல்லது முப்பது ஆண்டுகளை கழித்துவரும் தமதுசொந்தங்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருக்கும் உறவுகள் தினமும் வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்துகின்றார்கள். கண்ணீரோடுஅவர்கள் காலம் கழிந்தும் கரைந்து செல்லுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி எங்களுக்காக கிட்டியது என்று மார்தட்டியவண்ணம் எமது மக்கள் எவ்வித பயனும் இல்லாமல் அல்லலுறுகின்றனர். அங்கு அரசியல் பதவிகள் என்பது அதிகாரத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் சுகபோகத்திற்காகவுமே வழங்கப்பட்டுள்ளன என்று எண்ணக்கூடிய வகையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நேரத்தில் தான் எங்களைச் சந்திக்கவும் எங்களோடு  உறவாடவும் இங்கு வருகின்றார்,எங்கள் தலைவர் முதல்வர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள். கிட்டத்தட்ட எட்டு நாட்கள் இந்த கனடிய மண்ணில் தங்கியிருந்து எமது தாயகமக்களின் துயர்கள் கiளையும் விடயங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளப்போகின்றார் முதல்வர் ஐயா அவர்கள். அவர் அதிகாரத்திற்கோஅன்றி சுகபோகத்ததிற்கோ என்றும் அடிமையானவர் அல்ல. ஏற்கெனவே நீதியரசராக இருந்து அனைத்தையும் அனுபவித்தவர் அந்த உயர்ந்தவர். எனவே அவரை வரவேற்கும் வகையில் நாம் ஆயத்தங்களைச் செய்வோம் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.

இரண்டாண்டுகளுக்குமுன் நாம் இழந்தபொக்கிசம்

 

 

 

 

 

 

“அதிபர்” பொ. கனகசபாபதிஅவர்கள்

தங்கமனசு வெள்ளித் தலை முடி

நெடிய உருவம் நேர்மையின் இலக்கணம்

பொங்கும் புன்னகை◌ஒளிரும் வதனம்

எங்கும் தோன்றும் எங்கள் அதிபர்

 

விஞ்ஞானம் இலக்கியம் வித்துவச் செறிவு

தட்டிக் கொடுக்கும் தார்மீகப் பண்பு

சமூகஅக்கறை சமாதானப் புறா

சளைக்கா உழைப்பு சரியா மனிதம்

 

பூக்களும் கனிகளும் செல்லப் பிராணிகள்

புனிதர் இவரோடு பேசும் நண்பர்கள்

காக்கும் கரங்களாய் கடைசி வரையிலும்

யார்க்கும் உதவிய ஆதவன் மறைந்தது

 

ஆண்டுகள் இரண்டுஅமைதியாய் கழிந்தும்

ஐயனின் நினைவுகள் அழியாவரங்கள்

தூண்டும் கருவியாய துலங்கிய தேவன்

தொலைவில் இருந்தும் எம்மை இயக்குவார்

கனடா உதயன்