கத்தி சண்டை திரைவிமர்சனம்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபாலின்தயாரிப்பில் விஷால் – தமன்னா ஜோடியுடன் வடிவேலு , சூரி ஜெகபதி

பாபு … உள்ளிட்டோர் நடிக்க., காமெடிஸ்பெஷல்டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் வந்திருக்கும்காமெடிக்கும் பஞ்சமில்லாத சீரியஸ் ஆக்ஷன் சப்ஜெக்ட்தான் “கத்தி சண்டை.

“ஊரை அடித்து உலையில்.போடும், ஒரு எம்.எல்.ஏ வும் , எம்.பியும் ., கூட்டு சேர்ந்து தங்கள் ஊருக்குவரவேண்டிய சாலை வசதி , குடிநீர் வசதி , பள்ளிக்கூடவசதி , வீட்டு வசதி… எல்லாவற்றையும் செய்யாமல் செய்ததாக அரசாங்கத்திடம்கணக்கு காட்டி ஸ்வாகா செய்த பல நூறு கோடி பணத்தை தனது புத்திசாலிதனத்தால் ., சாமர்த்தியமாக அடித்துப் பிடுங்கி தடைபட்ட வசதிகளை தன் கிராமத்திற்கு செய்துதரும் கதாநாயகனையும் அவனது சாதனைகளையும் , காதலையும் பற்றிய கதை தான் “கத்தி சண்டை ” படம் மொத்தமும்.

செயற்கரிய காரியங்கள் பல செய்யும் கதாநாயகராக அர்ஜுன் ராமகிருஷ்ணனாகவேவாழ்ந்திருக்கிறார் விஷால். அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சரி ., தமன்னாவுடனானகாதல் காட்சிகளிலும் சரி ., சூரி_வடிவேலுடனான காமெடி காட்சிகளிலும் சரி…. பிய்த்துபெடலெடுத் திருக்கிறார் விஷால்.

கதாநாயகி திவ்யாவாக -தமன்னா ., எக்கச்சக்கமாய் கலக்கி இருக்கிறார் நடிப்பிலும் சரிகிளாமரிலும் … வாவ் , என வாய் பிளக்க வைக்கிறார் அம்மனி.

னோதத்துவ டாக்டர் பூத்திரியாக வடிவேலு, இண்டெர்வெல்லுக்கு பின் தன்அடிப்பொடிகள் ஆர்த்தி, பாவா லட்சுமணன், பாலாஜி… உள்ளிட்டவர்களுடன்வருகிறார். பாவம் சிரிப்பு தான் வடிவேலுவை பார்த்ததும் பழைய மாதிரி ரசிகனுக்குவரமாட்டேன் என்கிறது.

அதேநேரம் இண்டர்வெல்லுக்கு முன் படத்தை விஷாலின் அதிரடி ஆக்ஷனுக்கு நிகராகதூக்கி பிடிப்பது ரவுடி தேவாவாக வரும் சூரியும் அவரது பெண் டான்ஸர்ஸ் கெட்-அப்புகளும் தான். அலுப்பு தட்டாமல் அதகளம் செய்திருக்கிறார் சூரி!

மற்றபடி, டெபுடி கமிஷ்னர் தமிழ் செல்வனாக வரும் ஜெகபதி பாபு, எம்.பி “கம் ” சென்ட்ரல் மினிஸ்டராக-ஜெயபிரகாஷ், எம்.எல்.ஏ.வாக தென்னவன், சம்பத் – தருண்அரோரா, செளந்தர்ராஜன், காலேஜ் புரபசராக சின்னிஜெயந்த், மருத்துவர் – மதன் பாப், நிரோஷா, ஆர்த்தி, சரண் தீப் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்துபளிச்சிட்டிருக்கின்றனர்.

கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ் மூவரின் ஆக்ஷன் காட்சிகள்அதிரடி.

பசும்பொன் ஜோதியின் காமெடி, கருத்து நெடி வசனங்கள் ஆர்.கே.செல்வாவின்படுத்தாத முன்பாதி படத்தொகுப்பு, ரசிகனை படுத்தும் பின்பாதி படத்தொகுப்பு. ரிச்சர்ட்எம்.நாதனின் கதைக்கேற்ற கலர்புல் ஒளிப்பதிவு,

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் “நான் கொஞ்சம் கருப்பு தான்..”, “இதயம், இதயம்…”, “எல்லாமே காசு…” உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.

காமெடி ஸ்பெஷல் டைரக்டர் சுராஜின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் அதிகாலை 3 மணியை இரவு 3 மணி என ஒப்பனிங் சீனிலேயே ஸ்லைடு போடுவது… உள்ளிட்ட ஒருசில குறைகளையும் பின்பாதி, சற்றே மிகுதியான இழுவையையும் கண்டும், காணாமல்இருந்து விட்டால், “ரமணா”, “கத்தி” பட பாணியில் சமூகத்திற்கான நல்ல விஷயம்பேசியிருக்கும் கத்தி சண்டையை பார்க்கலாம்.

ஆக மொத்தத்தில், சுராஜ் – விஷால் கூட்டணியின் “கத்தி சண்டை” – காமெடியில், சுராஜின் குரு சு.சியின் சண்டை, கருத்தில் விஜய்யின் கத்தி எனலாம்!”