- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்தார் வைகோ
கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடையில் இருந்து மயங்கி விழுந்தார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அதற்குப் பிறகு மேடையில் ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ பேசுவதற்காக மைக் அருகில் வந்தபோது மயங்கிய நிலையில் சரிந்து விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறிது ஓய்வுக்குப் பிறகு வைகோ மேடையில் பேசினார். 1 கி.மீ.தூரம் நடந்து வந்த களைப்பின் காரணமாகவே வைகோ மேடையில் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது.