கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் சி.இ.ஓ., சந்தா கோச்சார் மீதான விசாரணை முடியும் வரையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளார்.

ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி(சி.இ.ஓ.,) சந்தா கோச்சார், 56. இவர், விதிமுறைகளை மீறி, வீடியோகான் நிறுவனத்துக்கு, 3,250 கோடி ரூபாய் கடன் வழங்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதற்கு பிரதிபலனாக, இவரது கணவரின் நிறுவனத்துக்கு, வீடியோகான் நிறுவனம், சலுகை அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சந்தா கோச்சார் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை சுதந்திரமாக நடக்கும் வகையில், விசாரணை முடியும் வரை, அவர், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.ஐ.சி.ஐ., குழுமத்தின், ‘லைப் இன்ஷூரன்ஸ்’ பிரிவு தலைவர், சந்தீப் பக்சி, வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட உள்ளார்.