- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு
சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.
தவறவிடாதீர்
கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு; காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை வழக்கு விசாரணை வந்த போது வழக்கை ஜன.31-க்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். ஆனால் வழக்கு இன்று பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர் கபில்சிபல் நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்தார். இன்று வேறோரு வழக்கை விசாரிக்க இருப்பதால் அடுத்த வாரம் 11 எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது.