ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

43 லட்சம் அதிமுக உறுப்பினர்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரமாணப் பத்திரங்களாக்கி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு நியாயமான வாதங்களை முன்வைத்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் மேலும் விவரங்கள் கேட்டு நேரில் அழைத்துள்ளது. நாங்கள் டெல்லி சென்று கழக சட்டவிதிமுறைகள் குறித்து எடுத்துரைப்போம்.

எனக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு இல்லை. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எங்களுடன் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளரை எம்எல்ஏக்களோ, பொதுக்குழு உறுப்பினர்களோ தேர்ந்தெடுக்க முடியாது. கட்சி உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். கழக சட்ட விதிப்படி தேர்வு செய்யப்படாத பொதுச் செயலாளர் பதவியில் தொடர்வது செல்லாது என்று நாங்கள் வாதிட்டுக்கொண்டு இருக்கிறோம். மேலும் அவரால் ஏற்கெனவே உள்ள நிர்வாகிகளை நீக்கவோ, புதிய நிர்வாகிகளை நியமிக்கவோ முடியாது.

இந்நிலையில், ஜெயலலிதா வால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தின கரன் மீண்டும் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளராக அறிவித்து ஆர்.கே.நகரில் போட்டி யிடுவது கழக சட்டத்துக்கு எதிரா னது’ என்று ஓபிஎஸ் கூறினார்.

இந்நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.