- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா…!
2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட்வெற்றியைப் பெற்ற படம் – ‘குயின்’. விகாஸ் பால்இயக்கத்தில்
வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தகங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்குமிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல,சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும்தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இந்தப்படத்தின்கதையிலும், வெற்றியிலும் ஈர்க்கப்பட்ட பலர் குயின்ரீமேக் ரைட்ஸை வாங்க முயற்சி செய்தனர்.
நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜனுக்குஅதிர்ஷ்டம் அடித்தது. குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்உரிமையை வாங்கினார் அவர். குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் எந்த கதாநாயகிநடிப்பார் என தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளுக்கானகதாநாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரேவதி இயக்கத்தில்உருவாகும் ‘குயின்’ தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.மலையாளத்தில் அமலா பால் நடிக்கிறார். கன்னடத்தில் பருல் யாதவ் நடிக்கிறார்.
‘குயின்’ தெலுங்கு ரீமேக்கை அனிஸ் குருவில்லா இயக்குகிறார். இந்தப் படத்திற்கானகதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சரியான கதாநாயகி அமையவில்லைஎன்றால், தமிழுக்கு ஒப்பந்தம் செய்த தமன்னாவையே தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.