ஒன்றாரியோ முதல்வர் வடக்கு மாகாண முதல்வர் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் சந்தித்து உரையாடினர்

ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் ஆகியோர் குயினஸ்பார்க் மாகாண பாராளுமன்றத்தில் நேற்று மாலை உத்தியோக பூர்வமான முறையில் சந்தித்து உரையாடினர்.

மேற்படி சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தில் உதவிகள் தேவைப்படும், பெண்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக வடக்கு முதல்வர் திருசி. வி. விக்னேஸ்வரன் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒன்றாரியோ மாகாண அரசு ஆதரவு வழங்கும் என்று ஒன்றாரியோவின் முதல்வர் கெத்தலின் வின் உறுதியளித்தார்.