- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா, பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்தார்
தற்போது ஆட்சியில் உள்ள லிபரல் கட்சி சார்ந்த ஒன்றாரியோ மாகாணத்தின் அரசாங்கத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று மாலை மிசிசாகா மாநகரில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பல்லின ஊடகங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் முதியோர் பிரச்சனைகள் மற்றும் ஓய்வுபெறும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்.
அவர் தனது உரையில் இனிவரும் நாட்களில் ஒன்றாரியோ மாகாணத்தின பல நகரங்களில் இடம் பெறவுள்ள வட்டமேசை மாநாடுகளில், பல்லினங்கள் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து எதிர்காலத்தில் இளைப்பாறுதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்ற விடங்கள் தொடர்பாகவும், அதற்கான தயாரிப்பு நிலையில் ஒன்றாரியோ அரசு மாத்திரமல்ல ஏனைய பொதுச்சேவை நிறுவனங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆராயவுள்ளதாக தெரிவித்தார். மேலும் எமது மாகாணத்தில் இளைப்;பாறுதல் என்னும் விடயத்தில் எதிர்காலத்தில் முதியோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வே;ணடும் என்றும் குறிப்பிட்டார்.
மேற்படி வட்டமேசை மாநாடுகள் ஒன்றாரியோவில் பல்லின மக்கள் வாழும் நகரங்களான மார்க்கம், ஸ்காபுறோ, பிரம்டன், இலண்டன், மிசிசாகா மற்றும் ஒட்டாவா ஆகிய இடஙகளிலும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.