ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

மேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனைய நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன.

ரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.