ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர் நிக்கி ஹாலே (வயது 46). இந்திய அமெரிக்கரான இவர், அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் மூத்த அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹாலே தனது பதவி விலகலை இன்று அறிவித்து உள்ளார். ஆனால் அதற்கான காரணம் பற்றி அவர் வெளியிடவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்ட பின் 4 நாட்கள் கழித்து ஹாலேவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது.

தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராகவும் ஹாலே பதவி வகித்துள்ளார்.