ஐம்பதாவது நாளாகவும் தொடரும் கிளிநொச்சி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஐம்பதாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக தங்களுடைய உறவுகள் தொடர்பில் எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், இதற்கு உரிய பதிலை இந்த அரசு வழங்கவேண்டும் என கோரி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இது வரை தமக்குரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என போராட்டத்தில் ,ஈடுபட்டுள்ள விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.