ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ் ஃபுளாயிட் படுகொலையை அடுத்து ஆப்பிள் நிறுவனர் டிம் குக் மனித உரிமை அமைப்புகளுக்கு கருப்பர்கள் நலனுக்காக நிதி அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் ஜார்ஜின் கொலை அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.