எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன.

கருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.