எரிவாயு திட்டத்தை திமுகதான் செயல்படுத்தியது: வைகோ குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

தமிழகத்தில் மீத்தேன் திட் டத்தை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என பெயர் மாற்றம் செய்து நெடுவாசலில் எரிவாயு எடுக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இத் திட்டத்தை கொண்டு வந்திருந் தாலும், அதை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு கையெழுத் திட்டது திமுகதான். தற்போது எரிவாயு எடுக்க முயற்சி மேற்கொள்ளும் பாஜக அரசை அதிமுக அரசு கண்டிக்கவில்லை.

நைஜீரியாவில் எரிவாயு திட்டம் செயல்படுத்தி 6 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த சாகுபடியில் 60 சதவீதம் பருத்தி பாதித்தது. இதேபோல, 45 சதவீதம் கடலை, 40 சதவீதம் கோகோ அழிந்துவிட்டது. இந்த நிலையை தமிழகத்தில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது என்றார்.