- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

எம்.எல்.ஏ.க்கள் 8 பேருக்கு, ஒவ்வாமை சொகுசு விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைவு
கூவத்தூர் விடுதியில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு, ஒவ்வாமை ஏற்பட்டது இதை தொடர்ந்து விடுதிக்கு ஆம்புலன்ஸ் விரைந்து உள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதில், ஆளும் கட்சி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.ஆனால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.அவருக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க. வில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஓ.பன் னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தற்காலிக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.
சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏ.க்களை கூவத்தூ ரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர். கடந்த் 8 ந்தேதி அ.தி.மு.க தலைமைச் செயலகத்தில் இருந்து கூவத்தூர் சொகுசு விடுதிக்கும் அழைத்து செல்லபட்டார்கள். இன்றுடன் எம்.எல்.ஏக்கள் 6 வது நாளாக அங்கு உள்ளனர்.
இந்த் நிலையில் இன்று மதியம் சொகுசு விடுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேன் சென்றது. மேலும் மருத்துவக்குழுவினரும், விடுதிக்குள் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு, உணவு ஒவ்வாமையால் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.