எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: பின்வாங்கிய ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையால், தமிழகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., இந்த பிரச்னையை வைத்து, தினந்தோறும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.

இதற்காக, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் நடைபயணம் துவங்கினார் ஸ்டாலின். முன்னதாக, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வின் கருத்தையும் ஸ்டாலின் அறிய முயன்றிருக்கிறார். சில எம்.எல்.ஏ.,க்கள் தவிர்த்து மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்ற தகவல் கேட்டு அதிர்ந்து போய் விட்டாராம்.

இல்லையென்றால், நடைபயணத்தின் போது, காவிரிப் பிரச்னைக்காக, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்யத் தயார் என்ற அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட இருந்ததாகக் கூறப்படுகிறது.