எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை: அதிமுக ஜெ.தீபா அணியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை யின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ள தாக அதன் பொதுச்செயலாளர் ஜெ.தீபா நேற்று அறிவித்துள் ளார்.
இதுதொடர்பாக ஜெ.தீபா சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் திங்கள்கிழமை பதிலளிக்க உள்ளது. பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி அளிக்கப்பட்ட மனு குறித்தும் விரைவில் பதில் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பெயர் அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.