என் நினைவுகளில்! அந்த மரணஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

கனடாவாழ் இளம் ஆங்கிலமொழி மூல எழுத்தாளரும் உயர் பாடசாலை மாணவியுமான செல்வி சாருதிரமே அவர்கள் அண்மையில் நினைவு கூரப்பட்டமாவீரர் நாள் தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கம் ஒன்றும் அதன் மொழி பெயர்ப்பும்இங்கே பிரசுரமாகின்றது.
ஏற்கெனதனது ஆங்கில மொழி மூலமான ஆக்க இலக்கியத்துறையில் படைப்புக்களை எமக்களித்த செல்வி சாருதிரமே அவர்களது படைப்பில் காணப்படும் இலக்கியச் சுவையைநாம் அனைவரும் அனுபவிக்கவேண்டும். அத்துடன் அவரது எமது மொழிமீதும் இனத்தின் மீதும் கொண்டபற்றையும் மரியாதையையும் நாம் போற்றவேண்டும் –
பிரதமஆசிரியர் – கனடாஉதயன்
———————————————————————————–

என் நினைவுகளில்!
அந்த மரண ஓலங்கள் என் நினைவுகளுக்கு வருகின்றன

சித்திரவதைகளின் காட்சிகள்,கழுத்து அறுபட்டவர்களின் மரணஓலங்கள்.

களத்திலே நிற்கும்போது அந்த ஓலங்கள் எத்தனை முறைகள் கேட்கும்போதும் அத்தனை முறைகளும் என் இரத்தம் உறைந்து போகும். அவர்கள் பிடிபட்டால்,என் வாயிலே என்மரணத்தை எதிர்பார்த்து குருதியை சுவைக்கக் காத்திருக்கும் குப்பியை அவர்களுக்கு கொடுக்கபின் நிற்கேன். இது பிழையன்று.இது பிழையாகவும் இருக்க முடியாது.

சின்னச்சின்ன உணர்ச்சிகளை மீறி என் காதுச் செவிப்பறைகளை வந்து ஓங்கித் தாக்கும் என் இதயத்தின் துடிப்பு- எமக்கு நீதி வேண்டும்.

இந்தக் கொடூர உலகத்தின் வார்த்தைகள் இனிமையானவை,அவர்கள் சொல்லும் பாங்கும் மிகவும் இனிமையாக இருந்தது.

நான் செய்யநினைத்தேன்..இல்லை. நாங்கள் அனைவரும் செய்ததுபோல் அதைச் செய்ய ஏங்கினேன்.எங்கள் தாயகம் விடுதலை பெறும்வரை எங்களுக்கு ஓய்வுகிடையாது. எங்களின் அன்புக்குரிய தமிழ்மக்களே- எங்களின் பாசத்திற்குரிய தமிழீழம்…நீண்டநெடுங்காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்த பெரிய ஒருசமூகம். நான் வரலாற்றைமாற்ற விரும்பவில்லை.நான் அந்த ஓலங்களை புன்னைகையாக மாற்ற விரும்பு கின்றேன்.மீண்டும் எங்களின் மேனியில் சூரிய ஒளிபடவும்,மண்ணிற்காக மரணித்துப்போன மாவீரர்களின் இரத்தத்தின் உலோக வாடையோ அல்லது தங்களின் மார்பு எலும்புகள் உடையும் வரை ஓங்கி அடித்து,ஓலமிட்ட விதவைத் தாய்மாரின் கண்ணீரின் உப்புச் சுவையோ இல்லாத குடிநீரும் எனக்கு வேண்டும் எனநான் நினைக்கின்றேன்.

இதுதான் எனது வாழ்வின் குறிக்கோள்,உலகத்திற்கு.தேவைப்பட்டால் இதுதான் என் விதியென என் மண்ணின் விடுதலைக்காக என் நரம்புகளை வெட்டி என் உடலைப் பிளந்து தமிழினப் படுகொலைப் பாதகர்களை அவர்கள் விரும்பும் சொர்க்கத்திற்குப்
போக அனுமதித்து வீரமரணத்தை பெருமையோடு ஏற்க தயாராகவுள்ளேன். இல்லையேல் இந்தப் படுகொலை காரர்களை கூண்டில் அடைத்து மீண்டும் ஒரு விடுதலை நெருப்புக்கு தீ மூட்டுவேன்.

எங்களின் நோக்கங்களை கொடுமையான பழிவாங்கல்களாக எண்ணவேண்டாம் -இல்லை.தாய் தந்தை அற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,கண்ணீர் விடும் விதவைகளுக்கும்,அநியாயமாகக்

கொலை செய்யப்பட்ட எமது சகோதர சகோதரிகளுக்கும் நீதிவேண்டும். நீதியான அரவணைப்பு என்ற திறவு கோல் கொண்டு எங்களின் இருண்டு போன இதயங்களின் கதவுகளைத் திறந்து விடுதலை என்னும் ஒளியை உள்ளே விட்டால் நாங்கள் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராக உள்ளோம்.

எம்மினம் சுதந்திரமாக தலை நிமிர்ந்து வாழமுகத்தில் புன்சிரிப்போடு இறுதி மூச்சுள்ளவரை வீரமரணம் போன்ற அதி உச்சதியாகத்திற்கும் தயாராகவுள்ளோம். நாங்கள் மாவீரர்கள்,தமிழீழத்தின் போராளிகள்,எங்களின் உடல்களை நீங்கள் மறந்து போனாலும் எங்களின் விடுதலைத் தாகங்கள் நிறைவேறும்வரை எங்களின் ஆன்மாக்கள் உறங்காது.

இரக்கமற்ற சிங்களப் படைகளினால் எங்களின் சகோதரிகளின் குரல் வளைகள் திருகப்பட்ட போது அவர்களின் மரண ஓலங்கள் என் நினைவுகளில் வருகின்றன.

நம்பிக்கைகள் எல்லாம் நீறாகிப்போன என் அம்மாவின் கண்களும்,தொலைந்து போன அப்பாவின் உடலுக்குசெய்த இறுதிக் கிரிகைகளும் என் நினைவுகளில் வருகின்றன.

என் நினைவுகளில் -என் நினைவுகளில்-

உறுதியாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் அத்துடன் நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் வேண்டுவதும் எனக்கு நினைவில் இருக்கின்றது.

Original English Version is available Click here