- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
- மும்பை அணியை வீழ்த்தியது டில்லி: அமித் மிஸ்ரா அபார பந்துவீச்சு
- காங்., தலைவர்களே தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்; மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்
- நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஜுன் 23ல் வெளியிட திட்டம்
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஜுன் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் கவுதம் மேனன். ஒன்றாக எண்டர்டையின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் கவனம் செலுத்தத் துவங்கினார் கவுதம் மேனன். தனுஷுக்கு அளிக்க வேண்டிய சம்பள பாக்கியை அளித்தால் மட்டுமே, மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் தற்போது அப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. ‘ப.பாண்டி’ படத்தை வாங்கியுள்ள ராஜராஜன் இப்படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளார். ஆகையால், விரைவில் தனுஷுக்கு அளிக்க வேண்டிய பணத்தை கொடுத்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள்.
மேலும், இப்படத்தை முழுமையாக முடித்து ஜூன் 23ம் தேதி வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இதே தேதியில் தான் ஏ.ஆர்.முருகதாஸ் – மகேஷ்பாபு படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.