எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 30) இவர் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்திருக்கலாமே என புலம்பினர்.
இது குறித்து இரு வீட்டாரிடையே பிரச்சினை வெடிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று எச்.ஐ.வி பரிசோதனை செய்தனர். அப்போதுதான் அவர் கூறியது பொய் என அனைவருக்கும் தெரிந்தது.
விருப்பம் இல்லையென்றால் அதை சொல்லாமல், பொய் சொல்லி நிறுத்தியதால் பெண் வீட்டாருக்கு நிச்சயதார்த்தம் செலவு 13 லட்சம் ஆகியதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து கிரண்குமார் மீது  மணமகள் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிரண்குமாரை சிறையில் அடைத்தனர்.  விசாரணையில் தனக்கு விருப்பம் இல்லாமல் நடைபெறும் திருமணத்தை நிறுத்த தனக்கு எய்ட்ஸ் உள்ளதாக மணமகள் குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக போலீசாரிடம் கிரண் குமார் கூறினார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.