- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

எந்த நாட்டினது உத்தரவுக்கும் அடி பணியோம் – இலங்கை அரசு
எல்லா நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியான நல்ல உறவுகளைப் பேணிக் கொண்டாலும், எந்த நாட்டினது உத்தரவுக்கும் சிறிலங்கா கீழ்ப்பணியாது என்று சிறிலங்கா அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
“ தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது தொடக்கம், அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
அதேவேளை, சீனா, இந்தியாவுடனான உறவுகளை விரிவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்ற அடிப்படையில் தான் அரசாங்கம் முடிவுகளை எடுக்குமே தவிர, வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அடி பணிந்து முடிவுகள் எடுக்கப்படாது.
இந்த நாடு எமது மக்களால், எமது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. சிறிலங்காவின் இறைமையை அரசாங்கம் பாதுகாக்கும்.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையினால், எல்லா நாடுகளுடனும் சுமுகமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. எவர் மீதும் நாங்கள் கோபத்தில் இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.