- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
தொடர்ந்து விசாரணைக்கு பின்னர், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது, நவாசும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் தங்கியுள்ளனர்.