- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது
ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வர துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகளை சிறை வாசல் வரை அனுப்பி உள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் நீங்கள் எனக்கு கொடுத்தால் அவர்களை சிறைக்கு உள்ளாகவே அனுப்புவோம். காங்.,க்கு தெரியும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த மேலும் பலரின் பெயர்கள் வெளியே வரும் என்று. பெயர் மட்டுமல்ல, அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. தேர்தலில் ஊழல் செய்து, ஏழைகளுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என காங்., நினைக்கிறது.
கர்நாடகாவை தொடர்ந்து ம.பி.,யும் காங்.,ன் ஏடிஎம் ஆகி உள்ளது. ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் அதே நிலை தான். மக்கள் பணத்தை கொள்ளையடிக்க காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது. மோடியை அகற்றுங்கள், மோடியை அகற்றுங்கள் என்பது தான் காங்., டேப்ரிக்கார்டரில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே பாடல். இதை தான் காங்., சர்தார் வல்லபாய் பட்டேல் விஷயத்திலும் செய்ததது. பட்டேல் மட்டும் இல்லை என்றால் இந்தியா, காஷ்மீரை பெற்றிருக்க முடியாது.
நாட்டை சிறப்புடையதாக்க பட்டேல் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் காங்., அவற்றை சிதைத்து விட்டது. இந்தியர்களின் நம்பிக்கையையும் சிதைத்து விட்டது. பட்டேலுக்கு காங் என்ன செய்தது என்பதற்கு வரலாரே சான்று. பட்டேல் பங்களிப்புக்களை காங்., அளித்து விட்டது என்றார்.