- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஊழல் குற்றச்சட்டு: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு
ஊழல் குற்றச்சட்டு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இலங்கையின் மத்திய ரிசர்வ் வங்கி பங்குபத்திரங்கள் வெளியிட்டதில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த விவகாரம் குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றிக்கொண்டு இருந்த போது அதுகுறித்து விசாரணை அறிக்கையை வெளியிடாமல் அவர் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆளும் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.