ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:
பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.